
ஆந்திர திரை உலகின் தலைவலி என்று சொல்லப்படுகிறவர் ராம் கோபால் வர்மா.
இவர் எல்லோரையும் சகட்டு மேனிக்கு விமர்சிப்பார். என்றாலும் சூப்பர்ஸ்டார் அமிதாப்புக்கு இவரை பிடிக்கும். இவர் குற்றம் கண்டு பிடிக்காத தலைவர்கள் யாருமே இல்லை.
தமிழ்நாட்டு அரசியலையும் இவர் விட்டு வைக்கவில்லை. மன்னார்குடி மாபியா டான் சசிகலா என்றுதான் சொல்லுவார். சிறையில் இருந்தபடியே தனது ஆள் எடப்பாடியை வைத்து ஆட்சி நடத்தி வருகிறார் என்பார். ஜெயா-சசிகலாவுக்கு இடையேயான உறவுக்குப் பின்னால் இருக்கிற உண்மை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என்று சொல்கிற இவர் அடுத்து எடுக்கப்போவது சசிகலா வரலாறு.
அண்மையில் என்.டி.ராமராவ் வரலாறு பற்றி நடிகர் பாலகிருஷ்ணா எடுத்த இரண்டு பயோபிக் படங்களும் படு தோல்வியைத் தழுவிய நிலையில் லட்சுமி என்டிஆர் என்கிற பெயரில் படம் எடுத்திருக்கிறார். ஆந்திராவில் மட்டும் வெளியாகவில்லை.
இந்த நிலையில்தான் சசிகலா பயோபிக் அறிவிப்பு. வந்திருக்கிறது. அதிர்ச்சியில் தினகரன் கட்சிவேட்பாளர்கள்.
என்னமோ நடக்குதுங்க!




