"எதிரியின் வாய்க்குச் சோறு ஊட்டாத ஒரு ஆண்டவனை அல்லது சமயத்தை , கைம்பெண்ணின் கண்ணீரைத் துடைக்காத ஒரு கடவுளை அல்லது சமயத்தை நான் நம்ப முடியாது !"

இப்படி சொன்னவர் யாராக இருக்க முடியும் ?

கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சேர்த்த யாரோ ஒரு தலைவராக இருக்கலாம் என்று நினைக்கலாம் .

சுவாமி விவேகானந்தர் கடவுள் மறுப்பு இயக்கத்தவரா என்ன?

ஆண்டவன் எவனும் , சமயம் எதுவும் எதிரிக்கு உணவு கொடுக்காதே , கைம்பெண்ணின் கண்ணீரைத் துடைக்காதே என்று சொல்லவில்லை !

அப்படிச் சொல்கிறவர்கள் , அல்லது அப்படி செயல் படுகிறவர்கள் ஆத்திகம் நாத்திகம் பேசுகிறவர்களாகவும் அரசியல்வாதிகளாகவுமே இருக்கிறார்கள்

.இதுதான் உண்மை.

நாத்திகம் என்பது இங்கே சிலருக்கு முகமூடியாக இருக்கிறது .

அவர்கள் கடவுளர்களின் கள்ளக் காதலிகள் !

இரகசியமாக வணங்குகிறார்கள் .

ஆத்திகம் என்பதும் இங்கே வணிகப் பொருளாகவே பார்க்கப்படுகிறது .

கடவுளர்களின் பெயரால் காசு பார்கிறார்கள் .

ஆக நாத்திகமோ ஆத்திகமோ எதுவுமே இங்கே நேர்மையாக அணுகப் படவில்லை என்பதே உண்மை .

புனிதமாக மதிக்கப்படுகிற ஆலயங்கள் இன்று வணிகப் பொருட்கள் விலை போவதற்கு , விளம்பரச் சாதனங்களாக பயன்படுகின்றன .

இது உண்மையா இல்லையா?