இளைஞர்கள் சேர்ந்து நடத்துகிற அமைப்பு ரெயின் டிராப்ஸ்.
இந்த அமைப்பை தொடங்கியவர் அரவிந்த் ஜெயபால்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நலத் தொண்டாற்றிய சிறந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார்கள்.
விருதுகளை சத்யபாமா பல்கலைக்கழகமும் தங்கம் ஜுவல்லரியும் இணைந்து வழங்கி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக விருதுகள் வழங்கி வருகிறார்கள்.
இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஏஆர்ரகுமானின் சகோதரியும் ,இசை அமைப்பாளர் நடிகருமான ஜி.வி.பிரகாஷின் அம்மா இசை அமைப்பாளர் ஏஆர் ரஹைனா இருந்து வருகிறார்.
இந்த ஆண்டு சிறந்த சமூக சேவகராக திவ்யா சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டார். சத்யபாமா பல்கலைகழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மரியஜேனா ஜான்சனுக்கு நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து டாக்டர்.