கமலின் விருமாண்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமாகியவர் சுஜாதா. அதன் சினிமா வேண்டாம் என்று இருந்தவரை அமீர் அவர்கள் தேடி பிடித்து பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் அம்மாவாக நடிக்க வைத்தார்.
அதை தொடர்ந்து வேல், பிரிவோம் சந்திப்போம், தோட்டா, ரம்மி, மௌனகுரு களவாணி, ரேணிகுண்டா, கோழிகூவுது, வீரம், சுறா, குருவி, பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஆயுதம்செய்வோம், துள்ளிவிளையாடு, வெயிலோடு விளையாடு, சரவணபொய்கை, கோலிசோடா, சுந்தரபாண்டியன், காக்கிசட்டை, நான்தான் பாலா, வெத்து வேட்டு, அமைதிப்படை – 2, 36 வயதினிலே, சந்தமாமா, ஒண்டிப்புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
டைமன்ட் நெக்லஸ் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார். பாடல் பாடவும் விருப்பம் உள்ளதாக கூறினார்.