சில ஆயிரங்கள் என்றாலும் அதற்கும் வட்டி போட்டு மிரட்டி வங்கிகள் வசூல் பண்ணிவிடும் என்கிற போது கோடிகளில் கடன் கொடுத்தவர் சும்மா இருக்க முடியுமா?
அமீஷா படேல் இந்தியிலும்,தெலுங்கிலும் பிரபலமான நடிகை.
இவர் மீதுதான் தயாரிப்பாளர் அஜய் சிங் போலீசில் புகார் செய்திருக்கிறார். தன்னிடம் 2.5 கோடி ரூபாய் அமீஷா கடன் வாங்கினார். ஆனால் திருப்பிக் கொடுக்க மறுக்கிறார்.அவரது படம் தேசி கி மேஜிக் வெளியானதும் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவதாக சொன்னார் ,ஆனால் பைசா தரவில்லை.பதிலாக செக்குகள் கொடுத்தார். அந்த செக்குகளும் பவுன்ஸ் ஆகி திரும்பி விட்டன.
கேட்டதற்கு பிரபலமானவர்களுடன் அமீஷா எடுத்துக் கொண்ட போட்டோக்களை காட்டி மிரட்டுகிறார். விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று மிரட்டுகிறார். அதனால் எனக்கு பாதுகாப்பும் பணமும் வேண்டும் “என்று சொல்லியிருக்கிறார்.
இப்படியும் சிலர் !