தேர்தல் ஆணையம் சொல்வது ஒன்று.ஆனால் நடப்பது வேறாக இருக்கிறது.
“இந்திய ராணுவத்தைப் பற்றி தேர்தல் பிரசாரங்களில் பேசக்கூடாது” என்று இந்திய தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது.
ஆனால் உத்திர பிரதேச பிஜேபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய ராணுவத்தை மோடியின் சேனையாக வர்ணித்துப் பேசி இருக்கிறார்.
“காங்கிரஸ் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி போட்டது. ஆனா மோடியின் ராணுவம் அவர்களுக்கு புல்லட்டையும் குண்டுகளையும் கொடுத்திருக்கிறது.” என்று யோகி பேசி இருக்கிறார்.
இவர் பதவி ஏற்ற நாளில் இருந்து சிறுபான்மையினரை கொடுமை செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். தேர்தல் கமிஷனை கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்கிறபோது எப்படி தேர்தல் நேர்மையாக,நியாயமாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?