“இயக்குநர் மகேந்திரன் மறைந்தார் என்கிற சேதி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மருத்துவ மனைக்கு சென்று பார்த்தேன். கவலையை கண்களில் மறைத்துக் கொண்டுதான் பார்க்க முடிந்தது.ஆனாலும் கண்கள் கலங்குவதை எப்படி தவிர்க்க முடியும்.
முள்ளும் மலரும் படத்தில் நானும் நடிப்பதாக இருந்தது. ஆனால் நெகட்டிவ் கேரக்டராக என்னால் நடிக்க இயலாது என்று சொல்லிவிட்டேன்.அந்த கேரக்டரில்தான் சரத்பாபு நடித்தார்.”என்றார் சிவகுமார்.
“தமிழ் சினிமாவின் இலக்கிய பூ உதிர்ந்து விட்டது.வரலாறு மறக்க முடியாத இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தமிழ் படைப்பாளி என் முன்னோடி ஆசான் இயக்குனர் மகேந்திரன் அவர்கள்.இதய அஞ்சலி சார்.”என தனது இரங்கலை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.
“தன் படைப்புகள் வழியே நம்மோடு கலந்திருக்கிறார்”என மகேந்திரனுக்கு சசிகுமார் புகழஞ்சலி
“தமிழ்த் திரை உலக இயக்குநர்களில் கதாநாயகனாக விளங்கியவர் இயக்குநர் மகேந்திரன்,யதார்த்த சினிமா இயக்குநர்,வசனகர்த்தா,நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர்,அவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது.”என தி.மு.க.தலைவர் ஸ்டாலின் தெரவித்திருக்கிறார்.
“முள்ளும் மலரும் மரணம்? இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந் ‘திறன்” என்கிறார் பார்த்தீபன்.
இயக்குநர் வசந்தபாலன் பதிவு “சமரசமில்லாத கலைஞர்.”