ஆர்யா ***
அஜிடேஷ் ராணா **
இசை ***
ஒளிப்பதிவு ***
இயக்கம் ***
எடிட்டிங் ***
கோவாவில் போதைப்பொருள் கடத்தலில் கொடிகட்டிப் பறக்கும் ஜோதியை பிடிக்க அம் மாநில காவல்துறை பல வருடங்களாக போராடி வருகிறது. ‘ஜோதி’ என்ற பெயரைத் தவிர அவன் யார்? எப்படி இருப்பான்? எங்கு இருக்கிறான் என்பது யாருக்குமே தெரியாத பரம ரகசியம்.(பில்லாவில் மேஜர் சுந்தர ராஜன் கேரக்டர் மாதிரி) அவனுடைய நெருங்கிய கூட்டாளிகளுக்கும், அடியாட்கள் பலருக்குமே கூட ஜோதியைப் பற்றி எந்த விவரமும் தெரியாது. அப்படியிருக்கும் ஜோதியைப் பிடிக்க மும்பை போலீஸ் உயர் அதிகாரிகள் ரகசிய ஆபரேஷன் ஒன்றைத் தொடங்குகின்றனர். அதில் ஒருவர் தான்( ஆர்யா )அருள், தன் பெயரை சிவா என மாற்றி ஜோதி (ராணா) டீமில் அடியாளாக அடிமட்டத்தில் இடம்பிடிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தன் திறமையை வெளிப்படுத்தி ஜோதிக்கு மிகவும் நெருக்கமான சிட்டியின் (மகாதேவன்) வலதுகரமாக மாறுகிறார்.இந்நிலையில் ஜோதியின் கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆயிரம் கிலோ போதை பவுடர் ‘சரக்கு’ திருடு போக, அதை எடுத்தது தங்கள் ஆட்களில் ஒருவன்தான் என சந்தேகம் வருகிறது ஜோதிக்கு.. ஜோதியை வெளியே வரவழைப்பதற்காக அருள்தான் அந்த சரக்கைத் திருடி மறைத்து வைக்கிறான். போலீசி ல் இருக்கும் தன் ஆட்களை வைத்துக் கொண்டு சரக்கைத் திருடியவனை ஜோதி நெருங்க ஆரம்பிக்க, இன்னொரு புறம் அருள் கொஞ்சம் கொஞ்சமாக ஜோதியை வெளியே கொண்டு வருகிறான்.ஒட்டுமொத்த கடத்தல் கும்பலு க்கும், தனி ஆளான அருளுக்கும் இடையே நடக்கும் இந்த மோதலின் முடிவில் யார், எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே இந்த ‘மீகாமன்’படத்தின் மீதிக்கதையாக்கியிருக்கிறார்.மகிழ் திருமேனி. படம் தொடங்கிய அடுத்தடுத்த காட்சிகளிலேயே கதையினுள் நுழைந்து விறுவிறுப்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். சாக்லேட் பாய் ஆர்யாவை ஆக்சன் நாயகனாக்கி படம் முழுவதும் மிரட்டியி ருக்கிறார்,இயக்குனர் மகிழ் திருமேனி ,ஆர்யாவும் அதற்கு துணை நிற்கிறார்.ஒரு ஆக்சன் த்ரில்லர் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இப்படத்தையும் தாராளமாக உதாரணம் காட்டலாம். படத்தின் முதல் காட்சியிலேயே நேரடியாக கதைக்குள் நுழைந்து, மெல்ல மெல்ல விறுவிறுப்பை ஏற்றிக்கொண்டே போகிறார்கள். முழுமையான ஆக்சன் படத்தைக் கொடுத்ததற்காகவே மகிழ்திருமேனியை ‘கைகுலுக்கி’ பாராட்டலாம்.ஒளிப்பதிவு, பின்னணி இசை, சண்டை இயக்கம், எடிட்டிங்,இந்த நான்கு விஷயங்களும் ‘மீகாமன்’ படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. எஸ்.ஆர். சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு,தமனின் பின்னணி இசை, சண்டை ,இயக்கம், எடிட்டிங்… இந்த விஷயங்களும் ‘மீகாமன்’ படத்திற்கு பெரும் பலம். அதோடு ,ஹீரோவை விட வில்லன் பவர்புல்லாக இருக்க வேண்டும். பற்களை நறநற வென கடிப்பது,களத்தில் இறங்கி சண்டை போடுவது, கத்தியைக் காட்டி மிரட்டுவது, துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டே திரிவது ,. கண்களை உருட்டி ,வெட்டி டயலாக் பேசுவது என எதையுமே செய்வதில்லைஆனால், அவன் மிகப்பெரிய ‘தாதா’ என்பதை மட்டும் ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.. இது இப்படத்தின் முக்கியமான பலம்..படத்தின் வில்லன் ஜோதி கேரக்டரில் அஜிடேஷ் ராணா. தமிழுக்கு புது வரவு;. எந்தவித அலட்டலும் இல்லாமல் திரையில் மிரட்டலாக வருகிறார்.வழக்கமாக கோவா, மும்பையில் நடைபெறும் கதையாக இருந்தால் சப்- டைட்டில் போடுவார்கள், ஆனால், இப்படத்தின் ஆரம்பத்திலேயே ‘கதை இங்கேதான் நடக்கிறது, என சாமர்த்தியமாக ‘டைட்டில் கார்டு’ போட்டுவிட்டார்கள்.ஹன்சி கா ஆர்யாவுடனான கிளுகிளுப்பான பாடல் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.கொஞ்சம் அதிகப்படியான வன்முறைதவிர்த்திருக்கலாம்.ஆர்யாவுக்கு . ஒரு ‘அன்டர்கவர்’ போலீஸ் அதிகாரியின் தோரணைக்கு அவரின் உணர்ச்சியற்ற அந்த பாடி லாங்குவேஜ் ஏகப்பொருத்தம். அதோடு ஆக்சன் காட்சிகளிலும் புகுந்து விளையாடிக்கிறார் . ஹன்சிகாவுக்கு போதிய வாய்ப்பில்லை .ஆனாலும் நம்மை கவர்கிறார். இப்படத்தில் அவரின் பின்னணிக்குரலை மாற்றியிருப்பது கொஞ்சம் வித்தியாசம். படத்தின் முதுகெலும்பான வில்லன் ‘ஜோதி’ கேரக்டரில் மிரட்டியிருக்கிறார் அஷுடேஷ் ராணா. அலட்டல் இல்லாத, அதேநேரம் மிரட்டலான நடிப்பு. தமிழுக்கு ஒரு சூப்பர் வில்லன். வெல்கம்! இவர்களைத் தவிர்த்து படத்தில் இன்னும் ஏகப்பட்ட வில்லன்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே அந்தந்த கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார்கள். ரமணாவும் ஒரு சின்ன கேரக்டர் செய்திருக்கிறார். ஹீரோவாக அவர் செய்த படங்களைவிட இந்த சின்ன கதாபாத்திரத்தின் ‘வலு’ அதிகம்.பாராட்டுகள். மொத்தத்தில் மீகாமன் ‘கேப்டன் ஆப் தி ஷிப்’.
ரேட்டிங்-3.5/5