சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் மோகன்பாபுவும் ஒருவர். நடிகர்,தயாரிப்பாளர் .இவரது மகன் மஞ்சு விஷ்ணுவுக்காக ஒரு படம் தயாரித்தார். தயாரிப்பாளரும் இயக்குநருமான சவுத்ரிதான் அந்த படத்தை இயக்கினார். கிட்டத்தட்ட எட்டு வருசங்கள் ஆகிவிட்டது.
அந்தப்படத்துக்காக இயக்குநருக்கு 48 லட்சங்களுக்கு காசோலை கொடுக்கப்பட்டது.
போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பி விட்டது.இது தொடர்பாக போட்ட வழக்கில் சவுத்ரிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கிறது.
மோகன்பாபுவுக்கு ஓராண்டு சிறை .41.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.