“ஹாரீஸ் மியூசிக் நல்லாருக்கு.கபிலனின் வரிகளும் ரொம்ப காதலா இருக்கு. சூர்யா,சாயேஷா காம்பினேஷன் சூப்பர். யூசுவலா பார்த்த இடமா இல்லாம புது இடமா இருக்கனும். காதல் பாட்டுக்கான பின்னணியாக அந்த இடம் கண்ணை கவரனும்”என்று இயக்குநர் கே.வி.ஆனந்த் சொல்ல ஒரு குழு ரஷ்யாவுக்கு சென்றது.
தேடு தேடுன்னு தேடி கடைசியா ஒரு இடத்தை செலக்ட் பண்ணிட்டாங்க. அந்த இடம் ஹனி மூன் தம்பதிகளுக்கு சுகமான இடமாம். அப்புறம் என்ன ..டைரக்டரிடம் செல்ல படப்பிடிப்புக் குழு ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறது. சூர்யா -சாயேஷாவும் புறப்பட்டாச்சு.
இதுவரை இப்படி ஒரு லொக்கேஷனை படத்தில் பார்த்திருக்க முடியாது என்கிறார்கள்.
அடிச்சு கிளப்புங்க! ரசிகர்களுக்கு தேவை அதுதானே!