“மச்சான், தலைவருக்கு தாடி சூப்பர்ல?அதான்யா அழகு.! முடியை ஒரு சிலுப்பு சிலுப்பி கோதிவிட்டுக்கிட்டு அவர் பேசுற ஸ்டைலே தனி மச்சான்.வேற எவனுக்கு அந்த அழகு இருக்கு?” என்று டி.ராஜேந்தரின் ரசிகர்கள் பேசிக் கொள்வார்கள்.அவருக்கு தாடிதான் அடையாளமே.!
ஆனால் ஆந்திராவில் பல தலைவர்கள் தாடி வளர்த்து வருகிறார்கள்.
அது தேர்தல் கால நேர்த்திக்கடன்.
ஜெயித்தால் தாடியை எடுப்பது .ஜெயிக்கலியா அப்படியே ஒரு வருஷம் கண்டினியூ பண்ணு,!
ஜனசேனா கட்சித் தலைவர் பவன் ஏன் தாடி வளர்க்கிறார்…அவரும் நேர்த்திக்கடன் வைத்திருக்கிறாரா?
படங்களில் அவர் தாடி வைக்கலியே ?
“இது வசதியா இருக்குங்க. படங்களில் நாம்ம இன்னொரு கேரக்டரா மாறும் போது கிளீன் ஷேவ். இப்ப அதுக்கு நேரமில்லையே.அது வளர்ந்திட்டு போகட்டுமே…மக்களும் விரும்புறாங்க. நமக்கு அந்த மாதிரியான நேர்த்திக் கடன் எல்லாம் கிடையாதுங்க.இப்ப லுங்கியில இருக்கிறது வசதியா இருக்கு “என்கிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி சூப்பர் ஸ்டார் பவன்