பொதுவா பாலாவுக்கு இருக்கிற கெட்ட பெயரே அவரை மூர்க்கராக சித்தரித்து வைத்திருப்பதுதான்.!
அடிப்பார்,இம்சிப்பார்,கடுமையான வேலைகளை கொடுத்து நடிக்க சொல்வார்.என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு. ஆனால் சிலர் இதை மறுத்திருக்கிறார்கள். வைவது மட்டும் கடுமையாக இருக்கும் என்பார்கள்.
விக்ரமின் மகன் துருவ் நடித்த வர்மா படத்தை இயக்கி தயாரிப்பாளரின் வெறுப்பினை சம்பாதித்திருப்பவரும் பாலாதான்.!
இதில் இருந்து மீள்வதற்காக ராமேஸ்வரத்துக்குப் போய் அங்கு உட்கார்ந்து கதை வசனத்தை எழுதியிருக்கிறார். அந்த படத்தில் நடிப்பதற்காக ஆர்யாவிடம் பேசியிருப்பதாக சொல்கிறார்கள்.தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.
யார் சொன்னால் என்ன இன்னும் சில நாட்களில் பாலாவே அறிவிக்கப்போகிறாராம்.
நல்ல சேதியை சொல்லப்பா பிள்ளையாரப்பா!