கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,தயாரிப்பு.:சத்தீஸ்வரன். ஒளிப்பதிவு:சி.டி.அருள்செல்வன், இசை:எஸ்.எம்.பிரசாந்த்.
நடிகர்கள்:ஜெயகுமார்,ஜெனிபர்,பாவா செல்லத்துரை ,ஆகாஷ்,பாலாசிங்.
***************************************************
குடிப்பழக்கமே இல்லாத அந்த ஊருக்கு கவுன்சிலர் புண்ணியத்தில் டாஸ்மாக் வந்து சேருகிறது. உடைப்போம்,நொறுக்குவோம் என்று கோபமுடன் கிளர்ந்தெழும் கூட்டத்துக்கு”ஒரு மாதத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக “கவுன்சிலர் இன்ஸ்பெக்டர் வாக்கு கொடுக்க கலைகிறார்கள். அந்த ஒரு மாதத்தில் என்ன நடக்கிறது?
தமிழக அரசு செய்திச்சுருள் என்று மந்திரிகளின் சுற்றுப்பயணத்தை வெளியிடுவதை சற்று நிறுத்தி விட்டு இந்த படத்தை சீரியல் மாதிரி வெளியிடலாம்.குடியின் தீமையை குடிமகன் படுசோகமுடன் பதிவு செய்திருக்கிறான்.ஊருக்கு ஊர் இந்த படத்தை தமிழக அரசு காட்டினால் பலர் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
குடி குடியை கெடுக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி இயக்குநர் விசு முன்னர் ஒரு படம் எடுத்திருந்தார்,ஜீவி தான் தயாரிப்பு.அன்றைய முதல்மந்திரி ஜெயலலிதா உதவி செய்து இருந்தார். எடப்படியார் இந்த படத்தையும் தத்து எடுத்துக் கொள்ளலாம்.
ஜெய்குமார்,ஜெனிபர் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குடியினால் ஒரு கிராமமே அழிகிறது என்பதை உருக்கமாக சொல்லியிருக்கிறார்கள் ஜெனிபரின் முடிவு இப்படித்தான் முடியும் என்கிற எதிர்பார்ப்பு உண்மையாகி விடுகிறது.தற்கால அரசியலும் படத்தில் இருக்கிறது, குடியின் கொடுமையை குறைத்து அரசியல் அவலங்களை சேர்த்து இருந்தால் கொஞ்சமாவது படத்தில் சூடு இருந்திருக்கும்.
குடிமகன்—ஆர்வக்கோளாறு.