உலகநாயகன் கமல் அரசியலுக்கு வந்து தேர்தலிலும் கட்சி குதிச்சிருக்கு. சூப்பர் ஸ்டார் ரஜினி மறுபடியும் மோடி ஆட்சிக்கு வந்தால் இங்க கட்சியை ஆரம்பிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். விஜயகாந்த் முன்னைப் போல அரசியலில் ஈடுபட முடியாது .
அடுத்து அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறவர் தளபதி விஜய். பக்கா மாஸ் . இவரிடம் பி.ஆர்.ஓ.வாக இருந்தவர் பி.டி.செல்வகுமார்.தயாரிப்பாளர். தற்போது விஜய்யை விட்டு விலகி நிற்கிறார்.திரைப்படத்துறையில் பல தயாரிப்பாளர்களுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.
அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் வாட்ச்மேன் படத்துக்கு பக்கா கெய்டு.விஜய் இயக்கி ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் படம்தான் வாட்ச்மேன் .
இந்த படத்தின் முன்னோட்டவெளியீடு இன்று நிகழ்ந்து.
அந்த விழாவில் பி.டி.செல்வகுமார், ஜி.வி.பிரகாஷ் ,நடிகர் சுமன் ஆகியோரின் பேச்சுதான் ஹைலைட்.
பி.டி.செல்வகுமார் பேசுகையில் “உண்மையான வாட்ச்மேன்கள் நமது இராணுவத்தினர்தான்.அவர்கள் எல்லையில் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு நம்மை காக்கிறார்கள். ஆனால் நாம் ஓட்டுப்போட்டு அனுப்பும் அரசியல்வாதிகள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.அரசியல்வாதிகள் வாட்ச்மேன்கள் இல்லை .அவர்கள் வாட்ச் MONEY யாக இருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இளைஞர். இவரைப் போன்றவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் .அவரின் பேச்சுகளைப் பார்க்கிறபோது அரசியல் பார்வையுடன் பேசுவது தெரிகிறது.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது .இனி இவ்விதம் நடக்காமல் கண்காணிப்பதற்காக 50 சி.சி.டி.வி .கேமராவை அந்த பகுதியில் படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் முடிவு செய்திருக்கிறார்”என்பதாக சொன்னார்.
நடிகர் சுமன் பேசுகையில்” ஹைதராபாத் அருகில் எனக்கு 175 ஏக்கர் நிலம் இருக்கு. அதை கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்துக்கு கொடுக்கலாம் என்று எனது மனைவி ஸ்ரீஜா சொன்னார்.நல்ல யோசனை என நானும் முடிவு செய்திருக்கிறேன்.இதைப்போல ஒவ்வொரு கம்பெனியும் செய்யலாம். சாதி,மதம்,இனம் வேறுபாடு இல்லாமல் எல்லையை காக்கிறார்கள். ஆனால் நாம்தான் ஜாதி மதம் இனம் என்று அடித்துக் கொண்டிருக்கிறோம் ” என்று சொன்னார்.
ஜி.வி.பிரகாஷ் பேசுகையில் “பெண்களின் முன்னேற்றத்துக்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தி உதவிகளை செய்து வருகிறோம்.சுமன் சார் சொன்னதைப் போல நானும் ராணுவத்தினருக்கு சில உதவிகள் செய்யலாம் என்று இருக்கிறேன் “என்றார்.