தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருபவர் சுஜா வருணி. ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மிளகாஉள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சுஜா வருணி, கமல்ஹாசன் நடத்திய பிக் பாஸ்தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் ஆனார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘வாடீல்’ என்ற படம் வெளியாக காத்திருக்கிறது.
இவரும் நடிகை ஸ்ரீப்ரியாவின் அக்கா வைஜெயந்தி -ராம்குமார் மகன் சிவாஜி தேவ் என்ற சிவகுமாரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவா்களது திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் தேதி நடந்தது.இந்நிலையில், தற்போது சுஜா வருணி கர்ப்பமாக இருக்கிறார். இச் செய்தியை சிவகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார்.
https://www.instagram.com/p/Bv4O6xclL8q/?utm_source=ig_web_copy_link