திட்டமிட்டபடி ஏப்ரலில் குறளரசனின் காதல் திருமணம் நடக்கிறது.இன்விடேஷன் கொடுக்கும் வேலையில் அப்பா டி.ராஜேந்தர் இறங்கி இருக்கிறார். அப்பாவும் பிள்ளையுமாக சேர்ந்து கேப்டன் விஜயகாந்தைப் பார்த்து அழைப்பிதழை கொடுத்திருக்கிறார்கள்.
கேப்டனுக்கு என்ன புரிந்ததோ அவரும் வழக்கம்போல புன்னகையுடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்..முன்னணி நடிகர்களில் பலர் பாரின், ஹைதராபாத் என்று இருப்பதால் அவர்களுக்கு எப்போது கொடுப்பார்கள் என்று தெரியவில்லை.
மணப்பெண் இஸ்லாமியர். காதல் திருமணம்.
வரவேற்பு 29 ஏப்ரல் கிண்டி சோழா ஐடிசி.யில்.!
கல்யாணம் முன்னதாகவே 26-ம் தேதி நடந்து விடுகிறது.
கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளை சொல்லி முன்னதாகவே வாழ்த்தி விடுவோம் நமது சினிமா முரசம் நேயர்கள் சார்பில்.!
“காதல் பறவைகளே கானம் பாடுங்கள்.!
கல்யாண மேளத்தோடு தாளம் போடுங்கள்.!
நாலும் பழகவிட்டு நடப்பதெல்லாம் நடக்கவிட்டு
பேசாத வார்த்தையெல்லாம் பேசிப்பாருங்கள் ! ( குறளரசனுக்கு சொல்லியா தரவேண்டும்.)
கொத்தோடு பழமெடுத்து கொல்லிமலைத் தேனெடுத்து
குடத்தில் பால் கொடுத்து குடிக்கச்சொல்லுங்கள்.!”
அண்ணன் எஸ்,டி.ஆருக்கு அப்படியே ஒரு பெண்ணைப் பாருங்கப்பு! வயசாகுதுல்ல.