துணிக்கடைக்காரர்கள்தான் அவ்வப்போது சலுகைகளை அறிவிப்பார்கள். ஆடி மாதம் வந்து விட்டால் எலக்ட்ரானிக்ஸ் கடை முதல் பாப்கார்ன் வியாபாரி வரை தள்ளுபடி சலுகைகள் உண்டு.!
அது மாதிரி ஆகிவிட்டது சினிமாவும்.!
அதை முதலில் தொடங்கி வைத்திருக்கிறார் காஜல் அகர்வால்.!
இவரது சம்பளம் 2 கோடி.! இதிலிருந்து ஒத்தை ரூபா கூட குறைத்துக்கொள்ள மாட்டார்.
கம்மி பண்ணிக்கொள்ள வேண்டுமா ,ஒரே ஒரு நிபந்தனை. அடுத்தடுத்து காஜலை புக் செய்து கொண்டால் சம்பளத்தில் சலுகை வழங்கப்படும். இது தான் அவரது சிறப்பு சலுகை. தமிழ்ப்படத்தயாரிப்பாளர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். இன்னும் முடிவாகவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு படங்களை புக் செய்தாலும் சலுகை உண்டு.