. தனுசை பற்றி விதம் விதமான செய்திகள்.
உண்டர்பார் நிறுவனத்தை மூடி விட்டார் என சிலரும் ,இல்லை இல்லை அது நாடகம்தான் என பலரும் பேசிக் கொள்ளும் நிலையில் சத்யஜோதியின் முதல் கட்டப் படப் பிடிப்பு முடிந்திருக்கிறது.
இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சினேகா, நவீண் சந்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது .
தற்போதுட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் மகிச்சியுடன் தெரிவித்துள்ளது . மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது .