தமிழ்,மலையாளம்,ஆந்திரம் இந்த மூன்று மாநிலங்களிலும் நயன்தாராதான் சூப்பர் லேடி ஸ்டார்.! கோடிகளை வைத்துக் கொண்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் காத்திருந்தார்கள். அந்த நிலை அறவே மாறவில்லை என்றாலும் அக்கட பூமியில் அம்மணியின் செல்வாக்கு சற்றே சரிந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகார்ஜுனாவின் படத்தில் ஜோடியாக நடிப்பதற்கு யாரை தேர்வு செய்வது என்கிற குழப்பத்தில் இருந்தார் தயாரிப்பாளர்.
நயன்தாரா,அனுஷ்கா இருவரது பெயரையும் எழுதி நாகார்ஜுனாவின் முடிவுக்கே விட்டு விட்டார். சிகிச்சைக்குப் பிறகு அனுஷ்கா முன்னை விட இளமையும் கவர்ச்சியாகவும் இருப்பதால் அவரது பெயரை டிக் செய்து நயனை ரிஜெக்ட் பண்ணி இருக்கிறார் நாகார்ஜுனா. ஆக ஆந்திராவில் நயனின் செல்வாக்கில் கிழிசல்!