ராசிபலன் பார்க்காத ஆளே கிடையாது. அப்படி பழக்கப்பட்டு கட்டங்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இந்த ராசி பலன் பார்க்கும் பழக்கம் உலகம் முழுவது உண்டு.
முதல் இரவுக்கு நேரம் காலம் பார்க்கிற பழக்கம் வழக்கம் இன்றும் உண்டு. ஆனால் அதைப் பற்றி கவலையே படாமல் முன்னதாகவே யாருக்கும் தெரியாமல் தங்களுக்குள்ளேயே முதலிரவை நடத்திக் கொண்டவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ராசியை வைத்து ஒரு படம்,
அதை இயக்குகிறவர் பிரபல நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி.பட நாயகன் நடிகர் ஹரிஷ் கல்யாண். படத்தின் பெயர் தனுசு ராசி நேயர்களே! படத்தின் ஹீரோவுக்கு தனுசு ராசியாம்!
படத்தின் நல்லது கெட்டது அந்த நடிகரைத்தான் சேரும்! இயக்குநர் சஞ்சய் பாரதி என்ன சொல்கிறார்?
. ‘”தனுசு ராசி நேயர்களே’ என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது.
கூடுதலாக, நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான்.
இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது. , இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவை தொடர்ச்சியான சம்பவங்களின் மூலம் வெளிப்படுகிறது.
ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள், அவர்களை இறுதி செய்து வருகிறோம். என்னுடைய இந்த ஸ்கிரிப்ட்டை உறுதியாக நம்பி, அதை திரைப்படமாக்க எனக்கு உதவியாக இருக்கும் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.