சூப்பர் ஸ்டாரின் லைகா தயாரிப்புக்கு ‘தர்பார்’ என பெயரிட்டிருக்கிறார்கள்.
இன்று சக்தி கணபதி விரத நாள்.அமோகமாக இருக்கும் சாஸ்திரப்படி!
நல்ல நாள் பார்த்துதான் பெயரை வெளியிட்டு போஸ்டரும் ஒட்டி விட்டார்கள்.
நாளை மும்பையில் ஷூட்டிங் .முதலில் ஃபைட் சீன் எடுக்கப்போவதாக பேச்சு.
தலைவருக்கு ஜோடி தலைவி நயன்தாரா.
மகள் கேரக்டரில் நிவேதா தாமஸ்,வில்லனாக எஸ்.ஜே .சூர்யா என சொல்லப்படுகிறது. இதெல்லாம் உறுதிப் படுத்தப்படாத செய்திகள்.
ரஜினிகாந்த் நடிக்கும் 167 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
11 வருடங்களுக்கு பிறகு நயன் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார். கோகோ படத்தை அடுத்து நயன்தாரா லைகா நிறுவனம் இணையும் இரண்டாவது படம் இது .
அனி௫த் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைகிறார். இது நீண்ட இடைவெளிக்கு பிறகு சேர்ந்து பணியாற்றுவது இரண்டாவது முறையாகும். அதே போல் ஏ.ஆர் முருகதாஸுடன் இரண்டு படங்களில் கூட்டணி அமைத்த சந்தோஷ் சிவன் மூன்றாவது முறையாக முருகதாஸ் அவர்களுடன் இப்போது இணைத்துள்ளார்.
பொங்கல் விருந்து.!
தலைவர் ஐ.பி.எஸ்.அதிகாரியாக வருகிறாரா,அல்லது மும்பை மாபியாவா என்பதெல்லாம் முருகதாசின் கற்பனை குதிரைக்கு மட்டுமே தெரியும். போஸ்டரை பார்த்தால் மும்பை கேட் வே ஆப் இந்தியா,போலீஸ் அதிகாரிக்குரிய சாமான்கள் எல்லாம் இருக்கிறது.நாய் வேற இருக்கிறது. பொங்கல் யாருக்கு வைக்கிறார்கள் என்பது தை பிறந்தால் தெரிந்து விடும்.
“நான் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதை எதிரில் இருக்கும் நீதான் முடிவு செய்கிறாய் ” என்கிற வாசகமும் இருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் தலைவருக்கு டபிள் கேரக்டர் என்பது தெரிகிறது. எதுவா இருந்தா என்ன போட்டுத் தாக்குங்க!