கடைசியில் பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது.
காவியின் நிறம் இதுதான் என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினி வழியாக காட்டிவிட்டது பி.ஜே.பி.
நானும் பா.ஜ.க.ஆதரவாளர்தான் என்பதை ரஜினி தெரிவித்து விட்டார். இனி பாஜக மேடைகளில் ரஜினியின் படங்களைப் பார்க்கலாம்.
இதோ அவரது வாக்குமூலம்.
“பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை .
எனது அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே நான் அறிவித்து விட்டேன்.
கமல்ஹாசன் ஆதரவு கோரியது குறித்து நான் எதுவும் பேச விரும்ப வில்லை.கமலுக்கு ஆதரவு தருவீர்களா என்பது மாதியான கேள்விகளை கேட்டு எனக்கும் கமலுக்குமான நட்பை கெடுத்து விடாதீர்கள்.
நீண்ட நாட்களாக நான் நதி நீர் இணைப்பு குறித்து பேசி வருகிறேன். அது என் கோரிக்கையும் ஆகும்.வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் நதி நீர் இணைப்பு குறித்து அவருடன்பேசியிருக்கிறேன்
.அவர் இந்த திட்டத்திற்கு நல்ல பெயர் வைக்கலாம் என்று கூட அவர் சொன்னார் இந்தத் திட்டத்துக்கு பகீரத யோஜனா என்ற பெயர் வைக்கலாம்..
வாஜ்பாய் கனவும் அதுதான்.நதிகளை இணைக்கும் தனி ஆணையம் அமைக்கப் போவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது .
அது வரவேற்கத்தக்கது இதைமட்டும் செஞ்சா பல கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் .நாட்டில் ஏற்பட்டுள்ள பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்.பா.ஜ. க கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நதிகளை இணைக்க வேண்டும்.” என்று கூறி இருக்கிறார்.
அதாவது மீண்டும் ஆட்சிக்கு மோடிதான் வருவார் என்கிற ரீதியில் அறிக்கையில் “மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்” என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.ரஜினி.