வெங்கட் பிரபுவின் படம் “ஆர்.கே.நகர்.”
பக்கா அரசியல் படம்.
ஜெயலலிதா இறந்ததால் ஆர்கே நகரில் இடைத் தேர்தல் நடந்தது. அதில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார்.
அதிமுகவும் தோற்றது. திமுகவும் சரியான அடி வாங்கியது.
இந்த தேர்தலை மையமாக வைத்து வெங்கட் பிரபு கற்பனையில் உருவானதுதான் ஆர்கே.நகர் திரைப்படம்.
வைபவ் ஹீரோ. சம்பத்துக்கு முக்கிய வேடம். இயக்கம் சரவணராஜன் ,வடகறியை இயக்கியவர். இசை அமைத்தவர் பிரேம்ஜி அமரன்.
இந்தப்படத்தை 12 -ம் தேதி வெளியிடுவதாக இருந்தனர்.
இந்தப் படம் வெளியானால் எந்த கட்சிக்கு ஆப்பு என்பது தெரியவில்லை.
அனேகமாக தணிக்கைக்குழு வழியாக ஆளும் கட்சிக்குத் தகவல் சென்றிருக்கலாம்.
ஆர்கே நகர் வந்தால் நமக்குத்தான் ரிவிட் அடிப்பார்கள் என்கிற பயம் வந்து விட்டதோ என்னவோ ,கட்டையைப் போட்டிருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு பரிதாபமாக டிவிட்டரில் கண்ணீர் விட்டிருக்கிறார்.
“சிலபல காரணங்களால் ஆர்.கே.நகர் படம் நிறுத்தப் பட்டிருகிறது.யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை.
ஆதரவு அளித்துவரும் சினிமா விரும்பிகளுக்கு நன்றி.