பரபரப்பான காதல் செய்திகளால் என்றுமே பார்வையில் இருக்கிறார் நயன்தாரா.
ஆனால் திரிஷாவுக்கு அத்தகைய காதல் செய்திகள் எதுவுமில்லை. இருந்தவைகளும் கரைந்து காணாமல் போய் விட்டன.
முன்னைப் போல வருகிற வாய்ப்புகளை வாரிப் போட்டுக்கொள்வதுமில்லை.தனக்கான கதையை உருவாக்கும்படி சொல்வதுமில்லை. 96 படம் வந்த பிறகு தனக்கு முக்கியத்துவமும் சவாலாக இருக்கும்படியான கேரக்டர்கள் வந்தால் மட்டுமே நடிப்பதற்கு ஒப்புக் கொள்கிறார்.நயனுடன் மோதுவதற்கு உரிய எல்லாத் தகுதிகளும் இவருக்கு இருக்கிறது.
ஏஆர் முருகதாஸ் எழுதியுள்ள கதையில் நடிப்பதற்கு திரிஷா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கவிருக்கும் இந்த படத்தில் திரிஷாவுக்கு ஜோடி யாரும் இல்லை. திரில்லர் படம்.லைகாவின் தயாரிப்பு.