கிரீன் பார்க் லான் சுத்தமாக மாறி இருந்தது.
விழா அரங்கம் வரை பாதையின் இரு பக்கமும் வாலைக் குமரிகள் குட்டைப் பாவாடைகளில்.!
காற்று சற்று ஓங்கி வீசினாலும் விவகாரம்தான்.!அதற்காகவே ஷட்டர் பக்ஸ் வெயிட்டிங். குறுக்கும் நெடுக்குமாக அந்த பெண்கள் நடந்து போகும் அழகே அழகு.! போதாகுறைக்கு அரங்கம் அதிர பாட்டுக் கச்சேரி.
மாளிகை என்கிற படத்தின் டீசர் வெளியீட்டு விழாவுக்காகதான் இந்த ஏற்பாடுகள்.
மும்பை தயாரிப்பாளர்கள் என்பதால் வட இந்திய பாணியில் வரவேற்புகள் .வந்திருந்தவர்களில் பாதிப்பேர் சென்னை வாழ் வட இந்தியப் பெண்கள்.!
கருத்து கஸ்தூரி கவர்ச்சி கஸ்தூரியாக மாறி இருந்தார் அவர்தான் மாளிகை படத்தின் தொகுப்பாளினி. உண்மையை சொல்வதென்றால் அவரது தொகுப்புரைதான் ஹைலைட்.
“உன் பேச்சுதான் நாளைக்கு ட்ரோல் ஆகப்போகுது”என்று இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் சொல்லியும் காட்டிவிட்டார். இரண்டு தயாரிப்பாளர்களில் ஒருவரது பெயர் கமல். மும்பைகாரர்.தமிழ் தெரியாது.
இவரை பேச அழைத்த கஸ்தூரி நடிகர் கமலுடன் ஒப்பிட்டு பேசி “என்ன புரியப் போகுதோ “என்கிற ரீதியில் கமெண்ட் அடித்து விட்டார்.அரங்கத்தில் சிரிப்பு அலைகள்.!
விழாவுக்கு வட்டக்கொண்டையும் மல்லிகைப்பூவுமாக பட்டுச்சேலையில் கல்யாணப்பெண் மாதிரி வந்திருந்தார் ஆண்ட்ரியா.
“இந்த படத்தை நான் ஒத்துக் கொண்டதற்கு காரணம் எனக்கு இரட்டை வேடம் என்பதால்தான் !பொதுவாக ஹீரோக்களுக்குத்தான் இம்மாதிரியான வேடங்கள் கிடைக்கும். பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள படம்.ஒரே படத்தில் ரொமான்ஸ்,பைட்,பீரியட் கேரக்டர் .அதனால்தான் ஒத்துக் கொண்டேன்.”என்றார் ஆண்ட்ரியா.
இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி “இனிமேல் இசை அமைப்பதில்லை”என்பதாக அவரது பேச்சில் குறிப்பிட்டார்.
கே.எஸ்.ரவிகுமாரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் கையில் ஏழெட்டு படம் வரை இருப்பதாகவும் சொன்னார்.