கொலையுதிர் காலம் பட விழாவில் ராதாரவி பேசியதைப் பற்றி நயனும் ராதாரவியும் மறந்து விட்டார்கள் என்று நினைத்திருந்தால் “இல்ல…நாங்க மறக்கல,மறக்க நினைச்சாலும் மத்தவங்க மறக்கவிடாம தூண்டிக்கிட்டே இருப்பாங்க “என்கிறார்கள் ராதாரவியும் ,நயனும்!
குறும்பட விழாவில் பேசியவர்கள் சும்மா இருந்த ராதா ரவியை உசுப்பேத்தி விட்டிருப்பார்கள் போலிருக்கிறது.
அவரும் “கிளம்பிட்டேன்யா கிளம்பிட்டேன்யா “என்று ஆவேசமாகி விட்டார்.
“மன்னிப்பு கேட்பது எங்க பரம்பரையிலேயே கிடையாது.பயம் என்பது என் குடும்பத்திலேயே இல்லை.எதுக்கு பயப்படனும்?
நடிப்பதை நிறுத்திவிடுவாங்கலாம். நாடகத்தில நடிச்சால் உங்களால் எப்படி நிறுத்த முடியும்?
இது என்ன ஐ.நா.சபை பிரச்னையா? கொலையுதிர்காலம் மேடையிலேயே மனம் வருந்துறேன்னுதான் சொன்னேன். மன்னிப்பு கேட்கல”என்று அந்த விழாவில் பேசி இருக்கிறார்.
இவரை உசுப்பேத்தி விட்டவர் இயக்குநர் பேரரசு என்கிறார்கள்.
இப்ப இந்த பேச்சுக்கு ராதிகாவை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் நயனின் ரசிகர்கள்.அனேகமாக அது நயனின் கருத்தாகவும் இருக்கக்கூடும்.
“ராதிகா மேடம், உங்களின் புத்திமதியை உங்கள் சகோதரர் கேட்கவில்லை. மூத்த நடிகையான நீங்கள் இளைய நடிகைகளுக்கு துணையாக இருந்திருக்க வேண்டும். அதில் நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள்.கடுமையான ஏமாற்றம் மேடம்”என பதிவு செய்திருக்கிறார்கள்.