“இது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது” என்றார் உலகநாயகன் கமல்ஹாசன்.
“நாமும் எத்தனை நாளைக்குத்தான் புளியோதரையும் பொங்கலும் சாப்பிட்டு நாக்கு செத்துப் போய் கிடக்கிறது.? இந்த மனுசப்பயலுக காதலைப் பார்த்தே சலிச்சு புளிச்சு போச்சுய்யா,வித்தியாசமா ஏதாவது பண்ண மாட்டாய்ங்களா?இப்படி எதிர்பார்த்தா வில்லனுக்கும் கதாநாயகிக்கும் கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சு இதான்டா ராசா வித்தியாசம்னுராய்ங்க..அட போங்கயா!”
இப்படி அலுத்துப் போகிறவர்களுக்காக ஒரு கதை வருகிறது .
பேய்க்கும் பேய்க்கும் காதல்.!
எப்படி வித்தியாசமா இருக்கா?படத்தின் பெயர் ‘பியார்’! இப்பல்லாம் தமிழில் பெயர் வைக்கிறதில்ல. நாமல்லாம் தமிழர் இல்லையே! இப்படி சொன்னா நமக்கு சூடு வரும்னு நம்புறீங்க?
டைரக்டரிடமே கேட்போம்!
பியார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் மில்கா எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தற்போது நட்ராஜ் மனிஷா யாதவ் நடிக்க முடிவடையும் நிலையில் உள்ள சண்டி முனி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
“வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத்தான் சேர்த்து வைப்பார்கள் ..இந்த படத்தில் வித்தியாசமாக ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.அ தாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க்காதல் என்றும் சொல்லலாம்.”என்கிறார்
.ஓ பேய்க்காதல் என்பதால்தான் ‘பியார்’னு பெயரா?