தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் அப்பா ஈஸ்வரன்.
அமரர் எம்.ஜி.ஆர்க்கு அறிமுகமானவர். அவரது கட்சி அனுதாபி. தற்போது எப்படியோ!
கதை கேட்பதில் திறமையானவர். காதல் கதைகளை தேர்வு செய்வதில் கில்லாடி. இவரைப் போலவே சக்தி பிலிம் பாக்டரி சக்திவேலன் “ஒரு படம் தேறுமா,தேறாதா “என்பதை முடிவு செய்வதில் திறமைசாலி.
இவர்கள் இருவரும்தான் “மெகந்தி சர்க்கஸ்’ படத்துக்கு அடிக்கல் நாட்டியவர்கள்.
மாதம்பட்டி ரங்கராஜ் என்கிற இளைஞரை படத்தின் நாயகனாக்கியவர் ஈஸ்வரன்.
“புதுசா ஒரு ஆளை கொண்டு வர்றமே ,தேறுவாரா மாட்டாரா “என்கிற அடிப்படையான பயம் எல்லோருக்குமே வரும். அதுவும் சமையல் கலையில் ராஜாவாக இருக்கிற இளைஞர் ரங்கராஜ். பணக்காரவீட்டுக்கல்யாணம் என்றால் முன்னதாகவே இவரை ரிசர்வ் செய்து விடுவார்கள்.அந்த அளவுக்கு பிரபலம்.அவரை சினிமாவுக்கு கூட்டிக்கொண்டு வருகிறோமே என ஈஸ்வரனுக்கு பயம்.
ஆனால் படத்தைப் பார்த்ததும் அந்த பயம் சுத்தமாக இல்லை என்பதாக சொல்லிவிட்டார்.
இவரை இந்த படத்தில் நடிக்கவைத்து சில காட்சிகளையும் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் சரவண ராஜேந்திரன். இவர் இயக்குநர் எழுத்தாளர் ராசு முருகனின் அண்ணன்.
“ஈஸ்வரப்பா நல்ல நடிகர் . இந்த படத்தில் ஒரு டான்ஸ் வேற ஆடியிருந்தார்.சிறந்த குண சித்திர நடிகராக வரக்கூடியவர். ஆனால் பாதியிலேயே விலகி போயிட்டார்.இவருக்குப் பதிலாக வேல.ராமமூர்த்தியை நடிக்க வைத்திருக்கிறோம். ஈஸ்வரப்பா நல்ல நடிகர் அவரை விட்டு விடாதீர்கள்.”என மற்ற இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்தார்.