மணிரத்னம் படம் என்றால் நடிகர்,நடிகையர் மத்தியில் ஒரு கிரேஸ்.
அவரது இயக்கத்தில் நடிக்க மாட்டோமா என்கிற ஆசை.!
இந்திய அளவில் அவர் பேசப்படுகிறவர்.
அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் அடுத்து தயாராகும் படம் ‘வானம் கொட்டட்டும்’.
அவரது துணை இயக்குநருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் விக்ரம் பிரபு ,ஜி.வி.பிரகாஷ் இருவரும் நடிக்கிறார்கள். விக்ரம் பிரபுவுக்கு ஜோடி மடோனா செபாஸ்டின். அனேகமாக ஜி.வி.பிரகாசுக்கு இணை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆக இருக்கலாம். வி.பிரபுவின் தங்கைதான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அனேகமாக அக்னி நட்சத்திரத்தைப் போல இதுவும் உடன் பிறப்பு பற்றிய கதையாக இருக்கலாம்.