படங்களில் மட்டும் கருத்துகளை சொல்லிவிட்டு நில்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் பின்பற்றுகிறவர்கள் தமிழ்ச்சினிமாவில் வெகு சிலரே! அவர்களில் ஒருவர் இயக்குநர் சேரன்( பாண்டியன்.)
ஆளுகிற கட்சிக்கோ,எதிர்க்கட்சிக்கோ ஆதரவு நிலை எடுப்பவர்கள் மத்தியில் சில உண்மைகளை சொல்லி இருக்கிறார். இதனால் அவர் ஆன்ட்டி இந்தியனோ,ஆன்ட்டி தமிழனோ அல்லர்.
சராசரி வாக்காளர்.
அவர் டிவிட்டரில் பதிவு செய்து இருக்கும் கருத்துகள் இதோ!
“மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மநீம, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களை கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள்.. தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள்தானே..