நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்கங்கள் மூலம் பல ஆண்டுகளாக சமுக சேவைகள் செய்தது வருபவர் என்றும், ஒரு தமிழரை தமிழ்நாட்டின் தூதுவராக தூய்மை இந்தியா திட்டத்திற்கு நியமத்தது சிறப்புகுறிய செயலாகும் என்று “வாமும் கலை” ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.
கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூற வேண்டி ஸ்ரீ ரவிசங்கர் விடுத்த அழைப்பினை ஏற்று ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை சந்தித்து வாழ்த்தினை பெற்றார்.
பின்னர் இன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்பாடு செய்திருந்த தூய்மை இந்தியா தூதர்களுக்கான தேநீர் விருந்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.