ஒரு காலத்தில தேவர் பிலிம்ஸ்,ராம,நாராயணன் ஆகியோர் வாயில்லா ஜீவன்களை வைத்துக்கொண்டு குடும்பங்களை தியேட்டர்களுக்கு கொண்டு வந்தார்கள். ஆடு மாடு,நாய், யானை,பாம்பு ,மயில் என நடப்பன, பறப்பன, ஊர்வன ஆகியவைகளை நடிக்க வைத்து திரைப்படங்கள் எடுத்தார்கள். அந்தப்படங்களில் சூப்பர் ஸ்டார்கள் கமல், ரஜினி ஆகியோரும் நடித்தார்கள்.
பீட்டா என்ற அந்நிய அமைப்பும் மத்திய மந்திரி மேனகா காந்தியும் சேர்ந்து பிராணிகள் வதை தடுப்பு என்கிற பெயரில் பிராணிகள் நடிப்பதற்கு ஆப்பு அடித்து விட்டார்கள். நாய் நரி நடிப்பதற்கு தனி சர்டிபிகேட் வாங்க வேண்டும்.
இந்த லொள்ளுக்குப் பயந்து யாரும் மிருகங்களை வைத்து படம் எடுப்பதில்லை.
ஆனால் பழம்பெரும் தயாரிப்பாளர் கே.சி.பொகாடியா ‘ராக்கி த ரிவென்ஜ்’என்கிற படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீகாந்த்,நாசர்,ஒஏகே சுந்தர்,சாயாஷி சிண்டே,இரண்டு ஜெர்மன் செப்பர்ட் நாய்கள்,நடித்திருக்கின்றன.
பணக்கார வீட்டில் திருடிக் கொண்டு போகும் இரு நாய்க்குட்டிகள் வழியில் விபத்தில் இடம் மாறி விடுகிறது. போலீஸ் அதிகாரி ஸ்ரீ காந்த் அதை போலீஸ் நாய் பயிற்சி கூடத்தில் விட்டு பழக்குகிறார். வழக்கம் போல எம்.எல்.ஏ. சாயாஷி சிண்டே,அடியாள் ஒஏகே சுந்தர் இருவரும் ஸ்ரீ காந்தை போட்டுத்தள்ள ராக்கி நாய் எப்படி பழி தீர்க்கிறது என்பதுதான் கதை.
வெகுகாலம் கழித்து திரைக்கு வந்தாலும் ஸ்ரீ காந்த் பளபளப்புடன்தான் இருக்கிறார்.எஷன்யா மகேஸ்வரி ஜோடி. காதல் காட்சிகளுக்கு பங்கமில்லை. இயக்குநர் பொகாடியாவுக்கு வயசானாலும் வாலிப சேட்டைகளை வஞ்சகமில்லாமல் படமாக்கி இருக்கிறார்.
பப்பிலகரி,சரண் அர்ஜுன் இசை அமைத்திருக்கிறார்கள். சிறப்பான ஒளிப்பதிவு.
காலம் கடந்து வந்துள்ள படம்.