இயக்குநர்.:ஏஎல்.விஜய். ஒளிப்பதிவு:நீரவ்ஷா, இசை:ஜி.வி.பிரகாஷ்,
ஜி.வி.பிரகாஷ்,சம்யுக்தா ஹெக்டே,ராஜ் அர்ஜுன்,யோகிபாபு,சுமன்,
***********************
ஜீவி.பிரகாஷ்க்கு 3லட்சம் ரூபாய் விடிவதற்குள் தேவை. அந்த இரவில் அந்த அளவுக்குப் பணம் கொடுப்பதற்கு அவர் ஒன்னும் வேலை வெட்டி பார்க்கிற ஆள் இல்லை. ஒரு பய தரலை. கடைசி முயற்சி திருட்டு. வசமான பங்களாவை பார்த்து கை வரிசையை காட்டலாம் என்று ஜி.வி.பிரகாஷ் போனால் அங்கேதான் ஏழரை தோமாலை போட்டுக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பிரச்னை தீர்ந்ததா ,இல்லையா?
குடிசை மாற்று வாரியத்து ஆசாமிக்கென நேர்ந்து விடப்பட்ட முகம்,அதற்கேற்ற டிரஸ்.ஆள் கச்சிதமாக பொருந்துகிறார். அந்த கேரக்டருக்கு நியாயமா எந்த அளவுக்கு பதற்றம், படபடப்பு பயம் தேவையோ அளந்து கொடுத்திருக்கிறார். கச்சிதம்.ஆனால் பணக்காரப்பெண் சம்யுக்தா ஹெக்டேக்கு எதைப் பார்த்து அவர் மீது அவ்வளவு லவ் வந்தது?
ஓய்வு பெற்ற டிஜிபி சுமனுக்கு இருக்கும் ஆபத்து தெரிந்தும் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கவில்லை. பயங்கரவாதிகள் சுலபத்தில் வீட்டுக்குள் புகுந்து விடுகிறார்கள். நெருக்கமான குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் படபடவென துப்பாக்கிகளால் சுட்டுக் கொள்கிறார்கள். பக்கத்து வீட்டு ஆட்களுக்கு சத்தமே கேட்கவில்லை என்றால்..?அட கடவுளே!
ஜி.வி.பிரகாஷ்,புருனோ நாய் தவிர மற்ற கதாபாத்திரங்கள் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. படா பயங்கரவாதிகளால் தனி ஆள் சுமனை போட்டுத்தள்ளமுடியவில்லை.நாயை கதை முடிவில்தான் போட்டுத்தள்ளவேண்டும் என்பது கதை என விஜய் முடிவு செய்து விட்டபிறகு என்னதான் செய்ய முடியும்?
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும்,ஜீவியின் பின்னணி இசையும் பாராட்டுக்குரியது.
யோகிபாபு வழக்கம் போல.! பெருசா சொல்ல முடியல.! படத்தையும் தான்!
சினிமா முரசத்தின் மார்க்ஸ்