தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன உடையுமோ தெரியவில்லை!
உலகநாயகனின் கண்களில் அள்ளி வருகிறது ஆவேசக்கனல்!
கோபத்தின் ஜ்வாலை ,குமுறும் எரிமலை.!
ஸ்டாலினின் குரல் கேட்கிறது.தொடர்ந்து மோடியின் பேச்சு.
ரிமோட்டை ஓங்கி வீசுகிறார் கமல்,உடைகிறது !
தொடர்ந்து அவரது பேச்சு!
“முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா?
இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துரத்தினார்களே அவங்களுக்கா?
நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மணமாக்கி நாட்டை தலைகுனிய வைத்தார்களே அவங்களுக்கா?
இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா?
யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?
நீ என்னடா சொல்றது. எங்களுக்கு தெரியும்.
எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது.
சரிதான், அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும்.
ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்.
மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்ணோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க.
அவங்க சொல்வாங்க யாருக்கு போடக்கூடாது என்று.
நாட்டை ஆள தகுதியே இல்லாத இந்த நாட்டில் அதை தட்டி கேட்கிற ஒருத்தனா உங்களில் ஒருத்தனா கேட்கிறேன்.
யாருக்கு ஓட்டு போடப் போறீங்க.
வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள்.
நிமிர்ந்து ஓட்டு போடுங்க. நீங்கள் வெற்றி களம் காணும் நாள்.
நாங்களும்தான்.” என்கிறார் கமல்ஹாசன்.