“எங்க ஏரியா உள்ளே வராதே “என்கிற கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்..வண்ட வண்டயாய் அதிமுகவை எத்தனையோ படங்களில் கிழித்துத்தொங்க விட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு எல்.கே.ஜி படத்தை சொல்லலாம். ஆனால் தளபதி விஜய் படம் என்றால் மட்டும் ஆளும் கட்சிகளுக்கு ஆகாமல் போய்விடும்.
பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து கொண்டு விஜய்யை தாக்குவார்கள். அதிலும் பா.ஜ.க.வினர் விஜய் கிறித்தவ மதம் சார்ந்தவர் ஜோசப் விஜய் என சொல்வதில் தனி. ஆனந்தம். சர்கார் படத்தின் போஸ்டர்கள் பிளக்ஸ் போர்டுகளை ஆளும் அதிமுகவினர் கிழித்து ,உடைத்தது தற்போது இந்த தேர்தலில் எதிரொலிக்கிறது. “இது தளபதி விஜய் ரசிகரின் வீடு .அதிமுக அணியினர் ஓட்டுக்கேட்டு வரவேண்டாம்” என போஸ்டர் அடித்து தங்ககள் வீடுகளுக்கு முன்பாக மாட்டி இருக்கிறார்கள்.
விருதுநகர் மாவட்ட தளபதி விஜய் மகளிர் அணியை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவர் தொடங்கி வைத்த இந்த போஸ்டர் மாநில அளவில் பரவி வருகிறது.
“ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிச்சு பிளக்ஸ் கட்டுனதை இவங்க கிழிச்சு போட்டதை மறக்க முடியலிங்க. அவங்களுக்கு பாடம் சொல்ல இதுதான் சரியான நேரம் “என்கிறார் ஜெகதீஸ்வரி.
அனேகமாக தளபதி விஜய் ரசிகர்களின் ஓட்டுகள் திமுக அணிக்குத்தான் விழும் என எதிர்பார்க்கிறார்கள்.