இன்று சித்திரை மாதம் பிறந்திருக்கிறது.
தமிழுக்கு சற்றும் தொடர்பில்லாத “ஸ்ரீ விகாரி” என்பதாக சொல்லி தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள்.
இதன் வேர்ச்சொல் சமஸ்கிருதம்.
விகாரி என்பதற்கு என்ன பொருள் என்று அறிந்தால் வேதனைப் படுவீர்கள்.
“காமுகன்” “விகாரமானவன்” என சொல்வார்கள்.
இதற்குத்தான் வாழ்த்துகள் சொல்லி வருகிறோம் .
பெருமையாக இருக்கிறதல்லவா?
அட போங்கய்யா!
இந்த சூழலில்தான் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
“உப்பிட்டதால் தமிழை ஒப்பிடக் கூட இங்கு ஒருவருமில்லை.!தமிழ்நாட்டின் அழகு,ஆற்றல்,பண்பை உலகத்துக்கு எடுத்துச் சொல்லும் “தாய் எங்கள் தமிழ்நாடே” உழைப்புக்கு சமர்ப்பணம்”என பதிவிட்டிருக்கிறார்.
தாய் எங்கள் தமிழ்நாடே என்பது ஒரு சிறப்புப்பதிவு. அதை பாராட்டுவதற்காக உண்மையையும் எடுத்து சொல்லி இருக்கிறார்.
முடிவில் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து என சொல்லியிருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. “உப்பிட்டதால் தமிழை ஒப்பிடக்கூட இங்கு ஒருவருமில்லை”