முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக கணவருடன் சிறையில் இருக்கிறார் நளினி. இவர் மட்டுமல்ல ஏழு பேர் இருக்கிறார்கள்.இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உரிமை இருந்தும் ஆளுநரின் மீது பழியைப் போட்டுவிட்டு சும்மா இருக்கிறது.
மத்திய அரசும் அரசியல் காரணங்களுக்காக வாய் திறவாமல் மவுனிக்கிறது
இந்த நிலையில் தான் நளினி தன்னுடைய மகளின் திருமணத்துக்காகவும் வயதான தாயை கவனித்துக் கொள்வதற்காகவும் 6 மாதம் ஜாமீன் கேட்டு பாஜக அரசுக்கு மனு செய்திருக்கிறார்.
குப்பையில் போடப்பட்ட நிலையில் இருக்கிறது.
இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் நளினியே வாதாட இருக்கிறார் என்கிறார்கள்
நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.