முன்னைப் போல கேப்டன் விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட முடியுமா என்பது தெரியவில்லை. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கேப்டனை அவசரமாக தேர்தலையொட்டி அழைத்து வந்து விட்டார்கள். அவர் இல்லாமல் தொகுதி பேரம் மற்ற இதர பேரங்கள் பேச முடியாது என்பதால் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்வதுதான்.!
தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் மகன்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதில் கேப்டனின் மனைவி பிரேமலதா தீவிரமுடன் இருப்பதாக சொல்கிறார்கள்.
மூத்த மகன் விஜய பிரபாகரனை அரசியலுக்கும்,சின்ன மகன் சண்முக பாண்டியனை சினிமாவுக்கும் தயார் பண்ணுவதுதான் அடுத்த கட்ட வேலையாக இருக்கும்.
இதுவரை இரண்டு படங்கள் நடித்திருந்தாலும் சண்முக பாண்டியனால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் காதலில் ஜெயித்திருக்கிறார் என்கிறார்கள் நெதர்லாந்து பெண்ணை நேசிப்பதாக சொல்கிறார்கள். அவரைத்தான் வெளிநாட்டு மருமகளாக ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
இருந்தாலும் இறுதி முடிவு அம்மாவின் கையில்தான்.!