சூர்யாவின் ரசிகர்கள் ஆழ்கடல் மாதிரி. ஆழமானவர்கள், ஆர்ப்பரித்து எழுந்தால் கப்பலையே கவிழ்த்து விடுவார்கள் தங்களுடைய அண்ணன் சூர்யாவின் படம் இன்னும் வரலியே என்கிற ஏக்கத்தில் இருக்கிறார்கள்.
மிகுந்த பொருள் செலவில்சுபாஸ்கரன் எடுத்துள்ள இயக்குநர் கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ படத்தையாவது முதலில் விடுங்கய்யா என்கிற ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
“ஆகஸ்ட் சுதந்திர நாளில் காப்பானை வெளியிடலாம்” என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் வெளிவரலாம் என்பதால் விநாயகர் சதுர்த்தி வாரத்தில் வெளியிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.ஆகஸ்ட் 30 கொழுக்கட்டை வாரம்.ரசிகர்களுக்கு ஆரவாரம்.!