கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆச்சு ..கே.ஜே.ஜேசுதாஸ் சினிமாவுக்குப் பாடி!
2009-ல் பழசிராஜாவுக்கு பாடிய பிறகு சினிமா பக்கமே வராமல் இருந்தவரை இசைஞானி பாட வைத்திருக்கிறார்.
எஸ்.என்.எஸ் மூவீஸ் கவுசல்யா ராணி எடுத்து வருகிற படம்தான் தமிழரசன். விஜய் ஆண்டனியும் ரம்யா நம்பீசனும் இணை சேர்ந்து நடிக்கிறார்கள். ராதாரவி,சுரேஷ் கோபி,யோகிபாபு,சங்கீதா,கஸ்தூரி,ஸ்ரீ லேகா உள்ளிட்ட பெருத்த பட்டாளமே படத்தில் இருக்கிறது.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு,கதை திரைக்கதை வசனம் இயக்கம் என பெரும்பொறுப்புகளை ஏற்று இருக்கும் பாபு யோகேஸ்வரன் கிட்டத்தட்ட படத்தை முடித்து விட்டார் என்றே சொல்லலாம்.
ஜெயராம் எழுதிய புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாடினால் சிறப்பாக இருக்கும் என இளையராஜா கருத தயாரிப்புக் குழுவினர் அழைத்து வந்து விட்டனர்.
ஸ்டூடியோவுக்கு வந்தவருக்கு இசைஞானி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
“பொறுத்தது போதும்,
பொங்கிட வேணும்,புயலென வா” என்கிற பாடலை அவருக்கே உரிய கம்பீரத்துடன் பாடி விட்டார். படத்தில் இந்த பாடலை விஜய் ஆண்டனி பாடுவது போல காட்சி இருக்கும்.
|