“மேடம்…ரெண்டு கோடி தரோம். ப்ளீஸ். ஒத்துக்குங்க.”
“முடியாது சார்! அந்த படத்தில என்னால எப்படி நடிக்க முடியும்?”-என்று கேட்கிறார் நடிகை சாய் பல்லவி.
“மனசு வச்சா நடிக்கலாம் மேடம். பிராக்ஸன் ஆப் செகண்ட்ஸ் தான் !பணம் வேணும்னா இன்னும் அதிகமா தரோம். யோசிக்காதீங்க.!”
“அப்படி இல்லிங்க.இந்த மாதிரி படத்தில நடிக்கிறபோதுதான் நிறைய யோசிக்கணும்.முதல்ல இந்த படத்துக்கு என் முகம் சரிப்பட்டு வராது “என்று கடுமையாக மறுத்து அனுப்பி வைத்து விட்டார்.
இவ்வளவுக்கும் ஒரு விளம்பரப் படம்தான் !
ஃபேஸ் கிரீம்!
அவர் மறுத்ததற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும்.
அவரின் ரோஜா முகத்தில் நிறைய பருக்கள் இயற்கையாகவே இருக்கு.
மேக் அப் இல்லாமல் முதலில் முகத்தைக் காட்டி விட்டு பிறகு அந்த கிரீமை பயன்படுத்தியதால் பருக்கள் மறைந்து விட்டது என்பதுதான் கான்செப்ட்.
“நான் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை“என்று மறுத்திருக்கிறார் சாய் பல்லவி.