
அந்த நடிகை குழந்தை நட்சத்திரமாக நடித்து நாயகியாக வளர்ந்தவர்.
ஆள் நல்ல உடம்பு. கொஞ்சம் குண்டு.இதனால் டி.வி.யில் சில கேரக்டர்களுக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று நிறைய வாய்ப்புகளை கொடுத்தார்கள்.
ரிச்சா பத்ராவுக்கு கல்யாணம் ஆச்சு.
ஹனிமூன் கொண்டாடிவிட்டு திரும்பவும் நடிப்பதற்கு வந்தார்.
ஒரு மாறுதல்.
“என்னை அனுசரிச்சுப் போகணும்” இது ஒரு ப்ரொட்யூசரின் கண்டிஷன்.
இன்னொருத்தர் “என்னை குஷி படுத்தனும்.அப்பத்தான் உனக்கு சான்ஸ் .ஹோட்டலுக்கு வர்றியா ?” என்று கேட்கிறார்.இந்த இன்டஸ்ட்ரிக்கு என்னாச்சு? கல்யாணம் ஆனவள்னு தெரிஞ்சும் இப்படி கூப்பிடுறானுகளே! நீங்க நாசமாப் போக.! வேணாம்யா இந்த தொழில்னு வெளியேறிட்டேன்” என மனம் உடைந்து சொல்கிறார் ரிச்சா.




