இயக்குநர் அமீர் மறக்கமுடியாத திரை உலகப் பிரமுகர்.
தமிழகத்தின் பிரச்னை என்றால் பாரதிராஜா ,சேரன், போன்றவர்களுடன் இணைந்து போராடக்கூடியவர். உரத்த குரல் எடுத்துப் பேசுகிறவர்.
அண்மைக்காலமாக இவரது பெயரை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை.
இவரது தயாரிப்பு நிறுவனமான டீம் ஒர்க் நிறுவனம் அச்சமில்லை அச்சமில்லை என்கிற திரைப் படத்தை தயாரித்து இருக்கிறது. இதில் ஹரிஷ் ,சாந்தினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவரது உதவியாளரான முத்து கோபால் இயக்கி இருக்கிறார்.
படத்தின் மூன்றாவது டீசர் இன்று வெளியானது.
வெளியிட்டவர் அ.ம.மு.கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.
திரை உலகத்தினர் இவரைக்கண்டு ஒதுங்கிப் போனது ஒருகாலம். இன்று முதன் முதலாக அவருடன் இணைந்திருக்கிறார் அமீர். இன்னும் பலர் இணைய வாய்ப்பு இருக்கிறது.
அதிமுகவுக்கு மேலும் நெருக்கடியை கொடுப்பார்கள் .