கதை திருட்டு என்பது சினிமாவுடன் ஓட்டிப் பிறந்தது.
திருட்டு என சொல்வது கவுரவக்குறைச்சல் என்பதால் சிலர் தழுவி எடுத்தது என சொல்லிக்கொள்வார்கள்.
சிலர் ‘கோஸ்ட் ரைட்டர்ஸ்” என வைத்துக் கொள்வார்கள். அரசியலில் இது சகஜம்.தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு திரைப்பட எழுத்தாளர் லியாகத் பேச்சு ,அறிக்கை எழுதிக் கொடுப்பதாக ஒரு தகவல் உண்டு. இவர் கேப்டன் படங்களுக்கு வசனம் எழுதியவர்.
சர்கார் படக்கதை தன்னுடையது என்று ஏஆர் முருகதாஸ் வாதாடினார்.ஆனால் நீதி மன்றம் வேறு விதமாக தீர்ப்பு சொல்லியது. எழுத்தாளர் சங்கம் முருகதாஸ்க்கு எதிராக இருந்தது.
தற்போது தளபதி விஜய் நடிக்கும் தளபதி 63 என தற்காலிக பெயர் சூட்டப்பட்டுள்ள கதை தன்னுடையது என ஒரு புகார் கிளம்பி இருக்கிறது.
குறும்பட இயக்குநர் பி.செல்வா என்பவர் நீதிமன்றத்தை நாட அவர்கள் “திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தை” அணுகும்படி சொல்லிவிட்டார்கள்.
சங்கத்தில் செல்வா தற்காலிக உறுப்பினர். ஒருவர் மீது புகார் சொல்ல வேண்டும் என்றால் உறுப்பினர் பதவியில் ஆறு மாத காலம் இருந்திருக்க வேண்டும் என்கிற விதியைக் காட்டி புகாரை ஏற்க மறுத்திருக்கிறது.இதனால் அவர் மறுபடியும் நீதி மன்றத்தை நாடவிருக்கிறார்.
அட்லி என்றால் அவ்வப்போது இதே மாதிரியான புகார்கள் வரும் என்பது வழக்கமாகி விட்டது.