ஏஎல் .விஜய்யின் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கப்போகிறவர் இந்தி நடிகை கங்கனா ரனாவத்.
மணிகர்ணிகா படத்தில் ஜான்சிராணியாக நடித்தவர்.
இவருக்கும் நடிகை அலியா பட்டுக்கும் பிரச்னை.
“தன்னை விட நல்லா நடிக்கல” என்று அலியாவை மட்டம் தட்டினார் கங்கனா.
பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான மகேஷ் பட்டின் மகள்தான் அலியா பட்.
கங்கனாவின் கடுமையான வார்த்தை பிரயோகத்தினால் அலியாபட்டின் அம்மா சோனி ரஸ்தானுக்கு கோபம் வந்து விட்டது.
மகளுக்கு ஆதரவாக களம் இறங்கியவர் “கங்கனாவுக்கு பெரிய திருப்பத்தைக் கொடுத்த பெரிய மனுசன்தான் மகேஷ்பட். அவரின் மகள் மீது பழியைப் போடுறது நேர்மையா? எதுக்கு இந்த வெறி ?”என கேட்டிருந்தார்.
“நீ அம்மாவைஎறக்கினா நான் என் சகோதரியை எறக்கிறேன்”என்று கங்கனா தன்னுடைய சகோதரி ரங்கோலியை உசுப்பி விட,
ரங்கோலியும் பெரிய குண்டை தூக்கி வீசி இருக்கிறார்.
“நீங்கள் இந்திய வம்சாவளியினரே இல்லை.நான்-இந்தியன்ஸ்.இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களை தரம் தாழ்த்தி பேசலாமா?உங்கள் வெறுப்பை,அத்துமீறலை அனுமதிக்க முடியாது.
சோனிஜி! கங்கனாவுக்கு திருப்பத்தைக் கொடுத்தது மகேஷ்பட் இல்ல.அந்த பெருமை அனுராக் பாசுக்குத்தான் !பட் டைரக்டரா வேலை பார்த்தவர்தான்.
உங்க பட் எழுதிய தோஹா படத்தில் சூசைடு பாம்பராக நடிக்க கங்கனாவை கேட்டாங்க. அவ மறுத்திட்டா. உங்காளுக்கு காட்டம்.
பிரிவியு தியேட்டருக்கு படம் பார்க்க வந்த கங்கனாவைப் பார்த்து மகேஷ்பட் கத்துனார். செருப்பை தூக்கி வீசினார்.அன்னிக்கி ராத்திரி முழுவதும் கங்கனா அழுதிட்டே இருந்தாங்கிறது உங்களுக்கு தெரியுமா?”என்று ரங்கோலி கேட்டிருக்கிறார்.
படத்தில் மகேஷ்பட்டும் கங்கனாவும் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்த்தீர்களா?