தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற அக்டோபர் 18 ந தேதி சென்னை மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடக்கவுள்ளது இத் தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமர்ர் தலைமையிலான ஒரு அணியும் ,நடிகர் விஷால் ,நாசர் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இதன் காரணமாக இரு அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு நடிகர் நடிகைகளை சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைபெற உள்ள தேர்தலில்
தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.சரத்குமார் ,
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார், ரவிக்குமார், எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், நிரோஷா, ஜெயமணி, வீரமணி, எம்.ராஜேந்திரன், கிச்சா ரமேஷ் ஆகியோர் பழம்பெரும் நடிகை மனோரமா ஆச்சி யை 13.09.2015 அன்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். உடன் அவரது பேரன் டாக்டர்.ராஜராஜன்உள்ளார்.முன்னதாக விஷால் அணியினர் நடிகை மனோரமாவை சந்தித்தது குறிப்பிடதக்கது.