மக்களவைத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பி இருக்கிறார். நாளை தனது வாக்கைப் பதிவு செய்து விட்டு மும்பைக்கு திரும்பிவிடுகிறார். ஓட்டை பதிவு செய்து விட்டு வழக்கம்போல ஒற்றை விரலை காட்டி போஸ் கொடுத்து விட்டுதான் வாக்கு சாவடியை விட்டு வெளியேறுவார்.
நாளை ஓட்டுப்போடும் எல்லாப் பிரபலங்களும் வரிசையில் நின்றுதான் போவார்கள். கேப்டன் விஜயகாந்த் வரிசையில் நிற்க தேவையில்லை.அவர் உடல் நலமில்லாமல் இருப்பதால் தனிச்சலுகை உண்டு. சாலிகிராமம் கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் வாக்குப் பதிவு நடக்கிறது.