காதல்னா ஒருத்தனும் ஒருத்தியும் கல்யாணம் பண்ணிக் கிட்டு கடைசி வரை சேர்ந்தே வாழணும்கிறது சட்டமா ?
இன்னிக்கி அகிலா, இவளை விட அழகானவ யாராவது கிடைச்சா அவ…இப்படி காதலிச்சிக்கிட்டே போறதுதான் லவ் வா?
இதை படிக்கிறபோது கோபம் வருதுல்ல. வரணும், பெரும் கோபம் வரணும்.ஆனா நாட்டு நடப்ப பார்த்தா நாம்ப கோபப்படுவதில் அர்த்தமே இல்லேன்னு தோனுதுல்ல.! மெது மெதுவா வெளிநாட்டு நாகரீகத்தில் ஆழ்ந்து மூழ்கிட்டு இருப்பது புரியலியா?
சரி அத விடுங்க. இப்ப ஆமி ஜாக்சன் மேட்டருக்கு வரலாம். அவங்க இங்கிலாந்து மாடல்,நடிகைன்னாலும் தமிழ் படங்களில் நடிச்சிருக்காங்க.
இப்ப கர்ப்பமா இருக்காங்க. இன்னும் கல்யாணம் ஆகல. இதை அவங்க தப்பா எடுத்துக்கல. கோடீஸ்வரர் ஜார்ஜ் என்பவரை காதலிச்சாங்க. அவங்களுக்கு காதல் புதிசு இல்ல.
முதலில் இந்தி நடிகர் பிரதீக் பாப்பர், அப்புறம் லிவர்பூல் குத்துச்சண்டை வீரர் ஜோ கிர்க்,ரயான்தாமஸ் என்கிற நடிகர்,இவர்களையெல்லாம் லவ் பண்ணிட்டு அவர்கள் சரிப்பட்டு வரலைன்னு முடிவு எடுத்திட்டுத்தான் ஜார்ஜ் காதலரை கைப்பிடிக்கப்போறாங்க.
“இந்த காதல் எனக்கு பிடிச்சிருக்கு. கர்ப்பம்கிறத உணர்ந்த பின் சந்தோஷமா இருந்தது.அது ஆணோ பெண்ணோ அந்த குழந்தைய சுமந்து கிட்டு சிலோன்,இந்தியா இப்படி சுத்தியதில் மகிழ்ச்சியே ” என்கிறார் ஆமி ஜாக்சன்.காதல் கணவர் தனது வயிற்றை தடவி உணர்வதை ரசிக்கிறார்.
ஆக காதல் என்பதற்கு சரியான ஆன்சர்தான் என்ன?