இயக்குனர்கள் பொன்ராம் எம்.பி.கோபி இருவருக்கும் சொந்த ஊர் உசிலம்பட்டி. படித்த அரசு மேல் நிலைப்பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?,
உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிக்க இரண்டு நாள் கிரிக்கெட் விழாவை நடத்திவிட்டார்கள்..அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டன.
இதில் வெற்றி பெற்ற அணியை.சிவகார்த்திகேயன் சென்னைக்கு வரவழைத்து மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவின் படம்தான் மிஸ்டர் லோக்கல். ராஜேஷ் எம்.இயக்கம்.
கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் சிவகார்த்திகேயனின் கரங்களால் விருது வாங்கியதை பெருமையாக நினைக்கிறோம் என்கிறார்கள் .
பொன்ராம் எம்.பி கோபி என்ன சொல்லுகிறார்கள் “,நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.. அப்போதுதான் சிவகார்த்திகேயனின் கனா படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.
அதன் காரணமாக .சிவகார்த்திகேயனை நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம் அவர் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால் அதற்கு பதிலாக அவருடைய கனா படஹீரோ தர்ஷன் அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ்இருவரையும் அனுப்பி வைத்தார். ரசிகர் மன்ற மாநில தலைவர் மோகன் தாஸ் இயக்குனர் ராஜேஷ்எம் ஆகியோரையும் விழாவிற்கு அனுப்பி வைத்தார். அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும்கொடுத்து கௌரவப்படுத்தினார்”என மகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.