தமிழகம் முழுவதும் விறு விறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை வெயிலே கடுமை காட்டினாலும் மக்கள் பொருட்படுத்தவில்லை.
பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியில்லை என்பதால் வாக்குப் பதிவு மணிக்கணக்கில் தாமதமாகியது ஜனநாயக சோகம்,
வாக்கு சீட்டு முறைதான் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் என்பது உண்மைதான். என்னதான் விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் எந்திரம் என்பது மனிதனின் கட்டுப்பாடுக்குள் இயங்குவதுதான்.
சரி அதை பற்றி தற்போது சொல்லி பயன் ஏதுமில்லை.
எந்திரங்கள் என்ன சொல்கின்றன என்பதை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு மாதம் வெயிட் பண்ண வேண்டும்.
செத்துப்போனவர்களின் வாக்குகள் இன்னும் உயிருடன் இருப்பதாக சொல்கிறார்கள்.
காலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவியுடன் வந்து வாக்களித்தார். கனிமொழியும் வாக்களித்துவிட்டு வழக்கம் போல பேட்டியை தட்டி விட்டார். டி.டி.வி.தினகரன் வந்தபோதுதான் அந்த வாக்குச்சாவடியே பரபரப்பாகியது. முதலமைச்சர் வந்தது போன்ற பிரமையை வாக்கு சாவடியில் உருவாக்கி விட்டார்கள்.
சிவகுமார்,சூர்யா,கார்த்தி, ஜோதிகா ஆகியோர் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்கள்.
கார்த்திக் ,மீனா, தேவயானி ராஜகுமாரன் ஆகியோரும் வாக்களித்தார்கள். அஜித்குமார் மனைவியுடன் வந்தபோது போட்டோகிராபர்கள்தான் நெருக்கடியை கொடுத்தார்கள் வாக்காளர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.
விஜய் வந்தபோது வழக்கமான நெருக்கடியை தவிர்த்து வாக்களித்து விட்டு திரும்பி விட்டார்,